ஆசிய கிண்ணம்-2022 ரி-20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ஓட்டங்கள் எடுத்தனர்.இதையடுத்து, 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.
இறுதியில், ஆப்கானிஸ்தான் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் சூப்பர் 4 சுற்றுக்குள் ஆப்கானிஸ்தான் நுழைந்தது.
லீக் ஆட்டத்தின் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணியை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: உலகம்